போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு குளிர்சாதன வசதியுடன் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு வழித்தடங்களில் தற்போது இயங்கி வரும் மெட்ரோ இரயில் சேவையில் கடந்த சில தினங்களாக தொழில்நுட்பக் கோளாறுகளால் பயணிகள் அவதிப் பட்டனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ இரயில் திட்டத்தால் பயணடைந்துள்ளார்கள். நாளுக்கு நாள் மெட்ரோ இரயிலில் பயணிகள் பயணிப்பது அதிகரித்து வரும் நிலையில் பயணக்கட்டணங்கள் குறைக்கப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் சார்பாக தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.