Mnadu News

சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் கோகுண்டா . இந்த கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது .இதனால் அங்கு துணைராணுவ படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

இதற்கிடையில் இன்று தேடுதல் பணியில் இருக்கும் துணை ராணுவ படையினருக்கு கோகுண்டா வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது . அப்போது அந்த வனப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவ படையினரை நோக்கி நக்சல்கள் வைத்திருந்த ஐஇடி குண்டுகளை வெடிக்க செய்தனர் .

இரு தரப்பினருக்கும் நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது . இந்த தாக்குதலில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர் .
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்த 2 வீரர்களையும் அங்கு இருந்து மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

Share this post with your friends