இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இன்று
மெல்போர்ன் மைதானத்தில்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோத இருந்தன.
மெல்போர்னில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக இந்த போட்டி முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது . ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்த போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்று மெல்போர்னில் ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது குறிப்பிடதக்கது.