ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது.அதன்படி, 2023ஆம் ஆண்டு ‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More