Mnadu News

2023-ல் 14 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் நிகழும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

சீனாவில் கடந்த மாதம் தினசரி கொரோன நோயத்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டது. அதன் விளைவாக, அங்கு நோய் பரவல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குரூப்ஸ் புரொஜக்ஷன் ஆய்வுக் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு எப்ரல் மாதம் சீனாவில் கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும். இறப்பவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும். சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து கொரோனா மரணங்களை சுகாதாரத் துறை அறிவிப்பதில்லை. கடைசியாக டிசம்பர் 3ஆம் தேதி நிகழ்ந்த கொரோனா மரணங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சர்ச்சைக்குரிய ‘பூஜ்ய கொரோனா’ கொள்கை தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த சந்திர புத்தாண்டில் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 1.4 மில்லியன் (14 லட்சம்) அதிகரிக்கும்.
சீனாவில் வரும் ஜனவரி மாதத்துக்குள் முதியவர்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என 60 சதவிகிதம் மக்கள் டிகாரோனாவால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More