கோவை ஈச்சனாரியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பா.ஜ.க வின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் பேசியுள்ள அண்ணாமலை, வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் ஒரு குருஷேத்திர போர். இந்த நாட்டில் இருக்கும் நல்லவர்கள் அனைவரும் பா.ஜ.க, தலைமையில் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். தீய சக்திகள் அனைவரும் எதிர்பக்கம் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கும் நமக்கும் பலப்பரீட்சை நடக்கப்போகிறது. இந்த குருசேத்திர போரை எதிர்கொள்ள நாம் அனைவரும் இன்று முதல் வீடு வீடாகச் சென்று மத்திய அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். என்று பேசி உள்ளார்.இந்த கூட்டத்தில், தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, எம்எல்ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More