Mnadu News

2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக அமையும்: சசி தரூர் ஆரூடம்.

தனியார் செய்தி நிறுவனத்தில் நேர்காணலில் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்; பேசியதாவது: பாஜகவுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் எளிதானதாக இருக்காது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல தற்போது வெற்றி பெற முடியாது. பாஜகவினைத் தவிர்த்து காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களிலும் காங்கிரஸ{க்கு ஆதரவு இருக்கிறது. கேரளம் மற்றும் தழிழகத்தில் காங்கிரஸ{க்கு ஆதரவு உள்ளது. கடந்த இரு மக்களவைத் தேர்தலிலும் பாஜக 31 சதவிகிதம் மற்றும் 37 சதவிகிதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் பிரிந்து தனித்தனியாக இருந்ததால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது மிகவும் முக்கியம். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் ஒன்றினைய வேண்டும். எதிர்க்கட்சிகளால் பொதுவாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அவர்களால் பாஜவின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அதன் பின் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஆளும் பாஜவுக்கு மிகவும் சவாலனதாக இருக்கப் போகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி நாட்டில் காணப்படுகிறது. அதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவை இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் பிரதிபலிக்க முடியாது என்றார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More