Mnadu News

2030-க்குள் தமிழகத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்- பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்த புதிய திட்டம் “கலைஞரின் கனவு இல்லம்” என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை, 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து அவர் உரையாற்றி வருகிறார். அதில், 2030-க்குள் தமிழகத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில்,

“கடந்த 2010-ம் ஆண்டில் குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி கிராம புறங்களில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசைகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More