Mnadu News

2047 ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை.

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம பட்டமளிப்பு விழாவில் பேசியுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்;, பல தொழில்நுட்ப மாற்றங்களைக் காணக்கூடிய வகையில் பாதுகாப்புத் துறையும் ஒரு மாற்றத்தைக் காண்கிறது.இருப்பினும் மாறிவரும் சூழ்நிலையுடன் நாம் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும். எந்தொரு சவாலுக்கும், தீர்வு இருக்கிறது. தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் முன்வைக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளிலிருந்து நாம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், அடிப்படைத் தேவைகளை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே குறிக்கோள்.நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்.பிரதமர் மோடியின் தலைமையில் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகில் வளர்ந்த நாடாக மாறும் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends