Mnadu News

3 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு: தென்னக ரயில்வே அறிவிப்பு.

காச்சிகுடா – மதுரை இடையே வாரந்தோரும் திங்கள்கிழமைகளிலும்; மதுரை – காச்சிகுடா இடையே புதன்கிழமைகளிலும், சில மாதங்களாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் – ராமநாதபுரம் இடையே வாரந்தோறும் புதன்கிழமைகளிலும், ராமநாதபுரம் – செகந்திராபாத் இடையே வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளிலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.காச்சிகுடா – நாகர்கோவில் இடையே வெள்ளிகிழமைகளிலும், நாகர்கோவில் – காச்சிகுடா இடையே ஞாயிறுகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Share this post with your friends