Mnadu News

3 பேரின் ரத்த மாதிரிகள் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிச. 26 ஆம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரிகளை சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தனர்.8 பேர் ரத்த மாதிரி தராதது குறித்து நீதிபதி உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends