3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் ஆவின் ‘டிலைட்’ எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் ஆவின் ‘டிலைட்’ பால் 500 மில்லி லிட்டர். பாக்கெட்டுகளில் தயார் செய்யப்படுகிறது.குளிர்சாதனப் பெட்டி வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 மி.லி. பாக்கெட்டின் சில்லறை விலை 30 -ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
500 மில்லி லிட்டர் ஆவின் டிலைட் பாலில் 3 புள்ளி 5 சதவிதம் கொழப்பு, ஜூரோ சதவிதம் பாக்டீரியா உள்ளது.
முன்பு இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் மக்களுக்குப் பால் பவுடர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆவின் டிலைட் பால் பாக்கெட் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More