சமீபத்தில் நடந்து முடிந்த 3 மாநில சட்டசபை தேர்தல்களில் திரிபுராவில் பா.ஜ., ஆட்சியை தக்க வைத்து கொண்டது. நாகாலாந்தில், என்டிபிபி – பாஜ., கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. மேகாலயா மாநிலத்தில் பா.ஜ., ஆதரவுடன் என்பிபி கட்சி ஆட்சி அமைக்கிறது.நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வரும் 7 ம் தேதி புதிய முதல்வர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். அதற்கு அடுத்த நாள் 8 ம் தேதி திரிபுரா முதல்வர் பதவியேற்பு விழா நடக்க உள்ளது. இந்த விழாவிலும் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More