Mnadu News

339 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம்: 100 அடிக்குக் கீழே சரிந்தது.

கடந்த நீர்ப் பாசன ஆண்டு காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து 2022-ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. பின்னர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாகவும் நீர்வளத் துறை அதிகாரிகளின் நீர் மேலாண்மை காரணமாகவும் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று பிற்பகல் வரை தொடர்ந்து 339 நாட்களாக 100 அடியாக நீடித்து இருந்தது.தற்போது, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 651 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.இதனால், 339 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 99 புள்ளி ஒன்பது பூஜ்ஜியம்அடியாக சரிந்தது.

Share this post with your friends