முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது. ஏற்கனவே, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூர் தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர்களான சவுத்ரி சரண் சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகாரின் கர்பூரி தாகூர் உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும், இதன் மூலம் ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.