Mnadu News

ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான 40 குழாய்கள் மர்ம நபர்களால் தீ வைப்பு – போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே அருந்தவபுரம்த்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் விளைநிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு செல்ல அங்குள்ள விளைநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய்கள் இறக்கப்பட்டது. இதனைக் கண்ட விவசாயிகள் அங்கு வந்த ஓ.என்.ஜி.சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற தெரிவித்ததை அடுத்து ஓ.என்.ஜி.சிஅதிகாரிகள் சென்றனர்.

இந்நிலையில் விளைநிலங்களில் வைக்கப்பட்டிருந்த 40 ஓ.என்.ஜி.சி குழாய்களுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துச் சென்றனர், இதில் 40 குழாய்களும் முற்றிலும் தீயினால் சேதமடைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Share this post with your friends