Mnadu News

451 கத்தோலிக்க பாதிரியார்கள்: 1990க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் பலாத்காரம்.

அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில், கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை உள்ளது. இங்கு, குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இது குறித்து மாகாண சட்ட மையம், 2018ல் விசாரணை துவங்கியது. இந்நிலையில், இந்த மையத்தின் தலைவர் அட்டர்னி ஜெனரல் குவாம் ரவுல்,வெளியிட்ட விசாரணை அறிக்கையில், கடந்த 1950 முதல் 2019 வரை, திருச்சபையில் இருந்த 451 பாதிரியார்களால், ஆயிரத்து 990 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளனர். இது, மிகவும் கொடூரமான செயலாகும். அப்பாவி குழந்தைகளை சிதைத்தவர்களை வெளிச்சம் போட்டு காட்டவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், இத்தகைய கொடூரர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து எம்நாடு தொலைக்காட்சியும் வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends