Mnadu News

5ஜி ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த அம்சங்களை பார்த்து வாங்க வேண்டும்? இதோ இதில் காணலாம்!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த சேவையை ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் முதல்கட்டமாக எட்டு நகரங்களில் அறிமுகம் செய்தன. அதே போல அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து பகுதிகளிலும் இந்த 5ஜி சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளனர்.

4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இந்த 5ஜி இணைய சேவை மூலம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை துவங்கினால் 5ஜி ரக அலைபேசிகளின் மவுஸ் அதிகரிக்கும்.

ஆனால், பல நிறுவனங்கள் 5ஜி வெளியாகும் சமயத்தில் ஆஃபர் விட்டு பல தேறாத அலைபேசிகளை தள்ளி விட்டு விடுவார்கள். அதை தவிர்க்க கீழே கூறப்படும் ஐந்து அம்சங்களை கவனித்து வாங்கினால் உங்கள் பணத்துக்கு
வொர்த் ஆக இருக்கும்:

1) எம் எம் வேவ் மற்றும் சப் 6Ghz இவை இருந்தால் 5ஜி வேகத்தோடு நல்ல நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும்.

2)குறைந்தது 5ஜி அலைபேசியில் 11 5ஜி பாண்ட் வசதி இருப்பது அவசியம்.

3)எப்போது 5ஜி சேவை அறிமுகமான பின்பு அப்போது வெளியாகும் புதிய அலைபேசி களை தேர்வு செய்வது சிறப்பு.

4)பேட்டரி 4500 முதல் 5000 MAH இதற்குள் கட்டாயம் இருக்க வேண்டும்.

5)அப்டேட் ஆக உள்ள ஸ்மார்ட் பேசிகளை வாங்குதல் சாலச் சிறந்ததாகும்.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More