மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமியான ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தீப் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடனமாடும் முயற்சியை தொடங்கி தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு நடனமாடி சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் கின்னஸ் உலக சாதனையு புத்தகத்தில் அவர் இடம் பிடித்துள்ளார். தனி நபராக சுமார் 127 மணி நேரம் நடனமாடி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். கின்னஸ் உலக சாதனை தளத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சாதனை குறித்து, பேசியுள்ள ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தீப், ந்திய கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் கதக் நடன முறையை பின்பற்றி, அவர் நடனமாடி உள்ளார். தனது நடன கலையின் மூலம் இந்தியா சார்பில் பங்கேற்பது தனது கனவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More