Mnadu News

5 வந்தே பாரத் ரயில் சேவை: வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

மேக் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் நாடு முழுதும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாடு முழுதும் புதிய வழிதடத்தில் 31 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது.இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் முக்கிய வழிதடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார். இந்நிலையில் வரும் 27-ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக கோவா -மும்பை, பாட்னா -ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர், பெங்களூரு-ஹ_ப்ளி உள்ளிட்ட 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

Share this post with your friends