பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டரை இந்திய மதிப்பில் 3லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே அதன் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் டிவிட்டர் மதிப்பீட்டுக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது டிவிட்டர் நிறுவனத்தின் பணியாளர்களை பாதியாகக் குறைப்பதற்காக மொத்தம் உள்ள 7 ஆயிரத்து 400 பணியாளர்களில் 3 ஆயிரத்து 700 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் கடிதம் அனுப்பியுள்ளார். இன்றிலிருந்தே ஊழியர்கள் பணியிலிருந்து விலக அதில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், டிவிட்டரில் நீண்ட காலம் பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More