தமிழ்நாடு சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானிய கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் தகுதியான 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக எந்தெந்த கடைகளை மூடுவது என்பது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது. 50 மீட்டர்களுக்கு இடையே இருக்கக்கூடிய மதுபானக் கடைகள், வருவாய் குறைவாக உள்ள கடைகள், பள்ளி, கோயில்கள் அருகில் உள்ள கடைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் 500 கடைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பிற்கு பின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 500 மதுபானக்கடைகளை மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More