பல்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 56 இளங்கலை முதுகலை படிப்புகள் அரசு வேலை பெற தகுதியானது அல்ல என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாணவர்களின் மத்தியில் பெரும் துயரத்தையும் மன வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி பிசிஏ, முதுகலை நுண்ணுயிரியல், முதுகலை விலங்கியல் உள்ளிட்ட 56 படிப்புகள் அரசு வேலைகள் பெறுவதற்கு தகுதியான பட்டயப் படிப்புகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில் 33 பட்டப் படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.