ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில .32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.அதோடு. ஸ்டான்லி மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை மையத்திற்கான இணையதள முகவரியை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்தியில் மருத்துவம் கற்றுக்கொடுப்பது போன்று தமிழிலும் கற்றுக்கொடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத் திட்டம் மொழி பெயர்ப்பு பணி நடந்து வருகிறது. முதலாம் ஆண்டு பாடப்புத்தகத்திற்கான மொழி பெயர்ப்பு பணி நடந்துவருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் தெரிவித்துள்ளார்.
தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிபேட்டை உள்பட 6 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் நிறுவ முன் அனுமதி கேட்டுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிதது உள்ளார்.
மருத்துவ கல்லூரிகள் நிறுவ அனுமதி கிடைத்தவுடன், தமிழ்வழி மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More