Mnadu News

62 ஆண்டுகளில் முதல்முறை: மும்பை, டெல்லியில் ஒரே நாளில் துவங்கிய பருவமழை.

மும்பையில் பருவமழை 2 வாரங்கள் தாமதமாக தொடங்கிய நிலையில், தேசியத் தலைநகர் டெல்லியில் 2 நாள்கள் முன்பாகவே பருவமழை தொடங்கியுள்ளது. இரு நகரங்களிலும் ஒரே நேரத்தில் பருவமழை பெய்யத் தொடங்கியிருப்பது அரிதான நிகழ்வு என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கு முன்பு, கடந்த 1961ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதிதான், டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நாளில் பருவமழை தொடங்கியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Share this post with your friends