Mnadu News

62 வயதில் மூன்று குழந்தைக்கு தந்தை! மகிழ்ச்சியில் குடும்பத்தார்!

குழந்தை பிறப்பு என்பது வரம் என்பார்கள். ஆம், எந்த தம்பதிக்கு திருமணம் ஆனாலும் குடும்பத்தார் எப்போது விசேஷம் வீட்டில் என அன்பு தொல்லை செய்வார்கள். அதே போல, குழந்தை பிறப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு ஒரு சான்றாக ஒரு வயதான நபர் மூன்று குழந்தைகளுக்கு தந்தை ஆகி உள்ளார்.

மகன் இறப்பு:

மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டம் அதர்வேடியா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 62 வயதான கோவிந்த் குஷ்வாஹா 60 வயதான கஸ்தூரி பாய் தம்பதி. சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களது ஒரே மகன் இறந்து விட்டார்.

இரண்டாவது திருமணம்:

இதனால் கஸ்தூரி பாய், தனது கணவரிடம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறவே, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்த் குஷ்வாஹா, ஹீராபாய் என்ற 30 வயது இளம் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

குழந்தை பிறப்பு :

இந்த நிலையில், திருமணமாகி 6 வருடங்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்த ஹீராபாய்க்கு 13 ஆம் தேதி காலை அறுவை சிகிச்சை மூலம் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது.

இது குறித்து மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் அமர் சிங் கூறும் போது ” வழக்கமாக பிரசவம் 35 வாரங்களில் நிகழும். ஆனால், ஹீராபாய்க்கு 34 வாரங்களிலேயே குழந்தைகள் பிறந்ததால் மூன்று குழந்தைகளுமே குறைமாத குழந்தையாக உள்ளனர்” என தெரிவித்து உள்ளார்.

வயதான தந்தை மகிழ்ச்சி:

மேலும், மூன்று குழந்தைகளும் மிகவும் பலவீனமாக இருப்பதால் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, 6 ஆண்டுகளுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More