அரியானாவைச் சேர்ந்த சீக்கிய சகோதரர்கள் குருதேவ் சிங் மற்றும் தயா சிங் ஆகியோரின் தந்தை இறந்துவிட்டதால், தந்தையின் நண்பர் கரீம் பாக்சாவின் கவனிப்பில் இருந்தனர். பிரிவினையின்போது கரீம் மூத்த மகன் குருதேவுடன் பாகிஸ்தான் சென்றுவிட, மற்றொரு உறவினருடன் தயா சிங் இங்கேயே தங்கிவிட்டார். பாகிஸ்தான் சென்ற கரீம் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தார். குருதேவ் சிங் பெயர் குலாம் முகமது என்று மாற்றப்பட்டுள்ளது.குருதேவ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, குருதேவின் மகன் முகமது ஷரிஃப், இந்திய அரசுக்கு, தனது தந்தை ஒரு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதில் தனது சகோதரர் தயா சிங் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும் ஊடகத்தில் தெரிவித்திருந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு, சமூக ஊடகங்களின் வாயிலாக தயா சிங் எங்கிருக்கிறார் என்பதை அறிந்து அவர்களை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, இருவரது குடும்பத்தினரும் கர்தார்புர் வளாகத்தில் சந்தித்து தங்களது ரத்த உறவை உறுதி செய்து கொண்டனர். 75 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்ததால் மகிழ்ச்சியில்; கண்ணீர் விட்டனர். பின்னர்அது ஆனந்தமாக மாறி, ஒருவர் மீது ஒருவர் பூக்களை தூவி, பாடல்களைப் பாடி இந்த இடத்தை கொண்டாட்டக் களமாக்கினர். இதையெல்லாம் பார்க்க தனது தந்தை குருதேவ் இல்லையே என்று மனம் வருந்தினார் முகமது ஷரிஃப்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More