Mnadu News

8 மாத ஊதியம் போனஸ்: ஊழியர்களை உற்சாகப்படுத்திய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 216 கோடி டாலர்கள் அதாவது சுமார் 17 ஆயிரத்து 280 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இதையடுத்து, ஆண்டு வருவாயின் லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், 8 மாத ஊதியத்தை தனது ஊழியர்களுக்கு போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஊழியர்களின் யூனியனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் நடவடிக்கையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது.முகவும் மூத்த பதவிகளில் இருப்பவர்களுக்கு இந்த போனஸ் பொருந்தாது எனவும், கொரோனா பெருந்தொற்று காலங்களில் அயராது பணிபுரிந்த ஊழியர்களுக்கு இதை வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சி அடைவதாகவும் அந்நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends