பண்டிகை நாள்களையொட்டி ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயில்; இருந்து 20 ரூபாhயக ஆக உயத்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு அக்டோபர் மாதம் 1 முதல் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைத்;து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் 10 ரூபாய் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைமேடை கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More