Mnadu News

9 ஆண்டுகளில் 8.8 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன: ஸ்மிருதி இரானி பெருமிதம்.

அரசு வேலைவாய்ப்புக்கான ரோகர் மேலா திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பணி வாய்ப்பு பெற்ற பலருக்கும் பணி ஆணையை நேரில் வழங்கினார்.இதையடுத்துப் பேசிய அவர், “காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசைக் காட்டிலும் 58 சதவீத கூடுதல் வேலைவாய்ப்புகளை நரேந்திர மோடி அரசு வழங்கி இருக்கிறது. தற்போது.பணி ஆணை பெறும் 70 ஆயிரம் பயனாளிகளையும் சேர்த்து, கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம்; அரசு வேலைவாய்ப்புகளை மோடி அரசு வழங்கி இருக்கிறது.ஒருவர் வேலைவாய்ப்பைப் பெறுவதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுவர் என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More