அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தனது வீட்டின் வெளியே விளையாடி கொண்டு இருந்த போது கீழே விழுந்துள்ளான். அப்போது அங்கு கிடந்த கத்தி, அச்சிறுவனின் வலது கண்ணுக்கு கீழே ஆழமாக குத்தியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவனின் தாய், அதிர்ச்சியடைந்து கத்தியை வெளியே எடுக்க முயன்றுள்ளார். பயந்துபோன அவரால் கத்தியை எடுக்க முடியாத நிலையில் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறுவனின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அந்த கத்தி சிக்கிக் கொண்ட நிலையில், மருத்துவர்கள் 4 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் கத்தியை வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். மேலும் அந்த சிறுவன் விரைவில் முழுமையாக குணமடைந்து விடுவான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.