Mnadu News

நம்பிக்கை இல்லா தீர்மானம் … சட்டப்பேரவை கூடும் போது தெரியும் – ஸ்டாலின்

சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவு செய்யப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் சந்திப்பின் போது பதிலளித்த ஸ்டாலின் கூறியதாவது , சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்பு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்.மேலும் அடுத்தபடியாக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சட்டமன்றம் கூடும் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்றும் தேதி அறிவித்ததும் அதுகுறித்து முடிவெடுப்போம் என்று கூறினார்.

Share this post with your friends