அரசியல் பரப்புகளுக்கு மத்தியில் அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை .ஒற்றை தலைமை சர்ச்சை குறித்தும் தேர்தல் குறித்தும் அதிமுகவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது .இந்நிலையில் ஆலோசனைகூடத்தில் அழைப்பிதழ் கொடுத்த 210 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள் கையில் செல்போன் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ,உறவினர்களின் துக்க நிகழிச்சிக்கு சென்றதால் ஓ .எஸ் மணியன் கூட்டத்திற்கு
செல்லவில்லை.
மேலும் இந்த கூட்டத்தில் சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்த எம்எல்ஏக்கள் பிரபாவதி ,கலைச்செல்வன் ,இரத்தின சபாபதி போன்றோர்களும் பங்கேற்கவில்லை.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளன .
தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி உள்ளிட்டோர் வந்தடைந்தனர் .