ஜோர்ஹட்டில் இருந்து கடந்த 3 ஆம் தேதி 13 அதிகாரிகளுடன் புறப்பட்ட ஏ.என். 32 ரக விமானம் திடீரென மாயமானது. இந்நிலையில் அந்த விமானம் அருணாச்சலப்பிரதேசத்தின் சியாங் மாவட்டத்திற்குட்பட்ட மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஆய்வுக் குழுக்கள் அந்த இடத்தைச் சென்றடைந்தன.விமானம் கிடக்கும் இடத்தின் சுற்றுப்பகுதியில் அதிகாரிகள் எவரும் உயிர் பிழைத்து இருப்பதற்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை என ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இந்திய விமானப்படை சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .