Mnadu News

பாதுகாப்புக் கோரி காதல் தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கிருத்திகாதேவி என்ற பெண்ணை கடந்த 12ம் தேதி அன்று சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக மணப்பெண்ணின் உறவினர்கள் பெண்ணை காணவில்லை என  ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு அளிக்கும் மனுவை ஏற்காமல் வேற்று மாவட்ட காதல் தம்பதிகளின் பாதுகாப்பு மனுவை ஏற்பதில்லை என போலிசார் தெரிவித்துள்ளதால் .காவல் நிலையம் செல்ல காதல் தம்பதியினர் அச்சப்படுகின்றனர்.

எனவே  இருவரையும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளதாகவும் மேலும் பெண்ணின் உறவினர்கள் தொடர்ந்து தனக்கு மிரட்டல் விடுப்பதால் சாதி ஆணவக் கொலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாலும் அது போன்ற நிலை ஏற்படாமல் காதல் தம்பதியருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Share this post with your friends