ஸ்பெயின் நாட்டில் நடந்த ராக் இசை நிகழ்ச்சியை பார்க்கத்துடித்த மாற்றுத் திறனாளி இளைஞரை நண்பர்கள் வீல் சேருடன் தூக்கி கொண்டாடினர். விவைரோ என்ற இடத்தில் ராக் இசைப் பாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உற்சாகக் குரல் எழுப்பினர். அப்போது ராக் இசையில் பெரிதும் நாட்டம் கொண்ட அலெக்ஸ் என்ற மாற்றுத் திறனாளி இளைஞர் தனது வீல் சேரில் அமர்ந்தவாறு வந்திருந்தார்.
அவரால் ராக் இசையை நேரடியாக பார்த்து ரசிக்க முடியாததால், அங்கு கூடி இருந்த ரசிகர்கள் அலெக்ஸை வீல் சேருடன் தூக்கி நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திச் சென்றனர். இறுதியில் மேடையிலேயே அமர்ந்து ராக் இசையை ரசித்தார் அலெக்ஸ்.