தினமும் மும்பையில் பல லட்சம் பேர் மின்சார ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் பெருகி வழியும் மக்கள் கூட்டத்துடன் செல்லும் மும்பை ரயில்களில் தொற்றிக் கொண்டு பலர் பயணிக்கின்றனர்.இதில் சிலர் ஓடும் ரயிலில் இருந்து விழுந்தும், தண்டவாளத்தை குறுக்கே கடந்து செல்ல முயன்று ரயிலில் அடிபட்டு இறந்துவிடுகின்றனர்.
சிலர் செல்பி மோகத்தால் ரயில் வருவதை கவனிக்காமல் மொபைலில் மூழ்கி உயிரிழக்கின்றனர். அதிகபட்சமாக ஒரே நாளில் பத்து பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், நேற்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் மின்சார ரயில்களில் பயணித்த 15 பேர் விபத்துகளில் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.