தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை முழுவதுமாக பதிவு செய்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் வலியுறுத்தினார்.
மக்களவையில் பேசியஅவர், தமிழகத்தில் கோவில்களில் பழமையான சிலைகள் பழம்பெருமை மிக்க கலைப்பொருட்கள் அதிக அளவில் இருப்பதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் அவை அனைத்தும் முழுவதுமாக பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறதா மேலும் அதற்கான பதிவு இருக்கிறதா என்றார் .
கனிமொழியின் இந்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 33 பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 40 பழம்பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவை தமிழகத்தை சேர்ந்தவை என்றும் அவர் கூறினார்.