தமிழ் திரை உலகின் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞர்களுள் ஒருவர் கிரேஸி மோகன். கமல், பாலசந்தர் ஆகிய இருவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் இவரது நகைச்சுவை காட்சிகளுக்கு என்றும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
சமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தாத மோகன் நாடகங்களை மட்டுமே இயக்கி வந்தார். இதனிடையே, மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை தொடர்ந்து மறைந்த நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகனின் உடல் இன்று காலை 10 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 11 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .