நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நாசர் தலைமையிலான அணி மற்றும் பாக்யராஜ் தலைமையிலான மற்றொரு அணி என இரு அணிகள் உள்ளன .இந்நிலையில் ,நடிகர் விஷால் ,நாசர் அணியினர் கடந்த வருடம் வென்றதற்கு காரணம் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி தரப்படும் என்று கூறியது ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில் நடிகர் விஷால் அவர்கள் நடிகர் சங்க தேர்தலை குறித்து ,அவர் கூறியதாவது காலி இடமாக இருந்த நிலம், தற்போது பெரிய கட்டடமாக உள்ளது என நடிகர் சங்க கட்டிடம் குறித்து நடிகர் விஷால் கூறினார் .மேலும், தமிழகம் முழுவதும் நாடக நடிகர்களை சந்தித்து வாக்கு கேட்போம் எனவும் அதன் பின்னர், தேர்தலுக்கு பின் நாடக நடிகர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் விஷால் கருத்து தெரிவித்தார் .
இந்நிலையில் ,நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் மனு கொடுத்துள்ள நிலையில் , சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிட கூடியது.