பிரபல நகைச்சுவை நாடக நடிகருமான புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார் .66 வயதாகும் இவர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .இந்நிலையில் ,தீவிர சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.இவர் தமிழில் பஞ்சதந்திரம் ,சதிலீலாவதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
திரையுலகம் முழுவதும் இவரது மறைவிற்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கிரேஸி மோகன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார் .