Mnadu News

நடிகர் சங்க நில விவகாரம் – சரத்குமார், ராதாரவி நேரில் ஆஜராகவில்லை

நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி ஆகியோர் முறைகேடாக நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்பனை செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், விஷால் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் மே 20ம் தேதி ராதாரவி, சரத்குமார் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜர் ஆகவேண்டும் என காஞ்சிபுரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் இருவரும் நேற்று ஆஜராகவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது .

Share this post with your friends