காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான, 26 சென்ட் நிலத்தை, சங்கத்தின் தலைவராக இருந்த சரத்குமார், பொதுச்செயலராக இருந்த ராதாரவி உள்ளிட்ட 4 பேர் முறைகேடாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் விஷால், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாணைக்கு உரிய ஆவணங்களுடன் இன்று விஷால், குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜரானார். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தென்னரசு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.