நடிகர் விக்ரம் தற்போது தன் படங்களில் மட்டுமல்லாது, தனது மகன் துருவ் நடிக்கும் முதல் படமான ‘ஆதித்ய வர்மா’ ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா நடிகர் விக்ரமுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாலா இயக்கிய படம் சரியில்லை என கூறி மொத்த படத்தையும் நீக்கிவிட்டு, தற்போது மீண்டும் வேறு பெயரில் படமாக்கி வருகின்றனர்.
அந்த படத்தில், “நான் இயக்கிய காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது” என்று பாலா இந்த நோட்டிஸினை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .