தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்திருந்தது.
அதன்படி தேர்தலுக்கான பணிகள் தேர்தல் ஆணையம் சார்பில் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்புக் கோரி மனு அளித்திருக்கும் இந்த சமயத்தில் எதிர்கட்சிகள் கலவரத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதால் கூடுதல் பாதுகாப்புக் கோரி அதிமுகவும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுவை அளித்திருக்கிறது.