Mnadu News

அத்வானி இல்லத்தில் வாழ்த்து பெற்ற வைகோ…

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் அத்வானியை தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று சந்தித்தார்.மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களை வைகோ சந்தித்து வருகிறார்.

அந்தவகையில் பாஜக மூத்த தலைவர் அத்வானியையும் அவர் நேரில் சந்தித்தார். டெல்லியிலுள்ள அத்வானியின் இல்லத்திற்கு தனது மனைவி, மகன் உள்ளிட்டோருடன் சென்ற அவர், அத்வானியிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் அத்வானியின் இல்லத்தில் அவருடன் அமர்ந்து வைகோ காலை உணவை அருந்தினார்.

Share this post with your friends