தேர்தலுக்கு பிந்தையா கருத்துக் கணிப்பை கிண்டலடிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த செயலுக்கு தற்போது நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்திருக்கும் டீவீட்டில் “நான் எப்போதும் ஒரு பெண்ணை தவறாகவோ, மற்றவர் மனம் புண்படுவது போல இருந்தால் அதை செய்ய மாட்டேன்.
ஒரு சில நேரங்களில் நாம் முதலில் பார்க்கும் பார்வை வேறுமாதிரியாகவும், பின்னர் வேறுமாதிரியாக தோன்றலாம். அதே போல் ஐஸ்வர்யாராய் மீம்ஸைப் பார்த்து நான் முதலில் சிரித்துவிட்டேன். தற்போது அதை நீக்கி மன்னிப்பு கோருகிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.