அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த நேர்கொண்ட பார்வை படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.போனிகபூர் தயாரிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு எப்பொழுது வெளிவரும் என்ற தேதி அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ,நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச். விநோத் இயக்கும் அஜித்தின் புதிய படத்திற்கான பூஜை, ஆகஸ்டு 29 -ம் தேதி நடக்கிறது. அஜித் முற்றிலும் மாறுபட்டு தோன்றும் இந்த புதிய படம் அடுத்தாண்டு, ஏப்ரல் 10 -ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.