அஜித் 62 விக்னேஷ் சிவன்:
அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகும் முன்னரே அவரின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்தார் அஜித். ஆகவே, விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதி ஆனது.

கதையில் திருப்தி இல்லை:
விக்னேஷ் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை என்பதால் இந்த படத்தை வேறு யாரையாவது இயக்க வைக்கலாம் என அஜித் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் கசிய துவங்கின. இதனால் ஜஸ்டிஸ் ஃபார் விக்கி என்கிற ஹாஷ் டாக் இணையத்தில் டிரெண்ட் ஆனது. ஆனால், விக்னேஷ் சிவன் இல்லை என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

மகிழ் திருமேனி அல்லது விஷ்ணு வரதன்:
மகிழ் திருமேனி மற்றும் விஷ்ணு வரதன் ஆகிய இருவரின் கதைகளை கேட்ட அஜித் மகிழ் ஐ வைத்து இந்த படத்தை முடித்து தீபாவளிக்கு கொண்டு வரலாம் என முடிவு செய்துள்ளார் என தகவல் கிடைத்து உள்ளது.

Ak 62 பட்ஜெட் மற்றும் சம்பள விவரம்:
லைக்கா இந்த படத்தை ₹220 கோடிகளில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அஜித் வாங்கும் சம்பளம் ₹105 கோடி என்றும், மகிழ் திருமேனிக்கு ₹3 கோடி என்றும் தற்போது தகவல் கிடைத்து உள்ளது. வெகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
