பிளாக் பஸ்டர் துணிவு :
துணிவு திரைப்படத்தின் வெற்றி அஜித்துக்கு ஒரு பெரிய பூஸ்டர் போல இன்னும் தரமான வெற்றிகளை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை கொடுத்து உள்ளது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி உள்ளது.

அடுத்த பட அப்டேட்:
துணிவு வெளியாவதற்கு முன்னரே தனது 62 வது படத்தை லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க போகிறார் என அஜித் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். சிலர் விக்னேஷ் சிவன் வேண்டாம் எனவும் கூறி இருந்தனர். ஆனாலும், அஜித் விக்கிக்கு போதுமான அளவு நேரம் கொடுத்து கதையை தயார் செய்ய கூறி இருந்தார்.

விக்னேஷ் சிவன் கதை பிடிக்கவில்லை:
இந்த வாய்ப்பை நழுவ விட கூடாது என விக்கி ஒரு கதையை தயார் செய்து அஜித் மற்றும் லைக்காவுக்கு கூற, கதையில் திருப்தி இல்லை என தற்போது லைக்கா கூறி உள்ளதால் 62 படத்தை இயக்க வேறு சில இயக்குனர்களிடம் டாக்ஸ் சென்று கொண்டு இருக்கிறது.

மகிழ் திருமேனி/ விஷ்ணு வரதன்?
62 படத்தை இயக்க மகிழ் திருமேனி மற்றும் விஷ்ணு வரதன் ஆகிய இருவரிடமும் லைக்கா கதைகளை கேட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதில் மகிழ் திருமேனி சொன்ன கதை பிடித்த நிலையில், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67 vs தல 62 :
தீபாவளி பண்டிகைக்கு விஜய் படம் வர உள்ளதால் தமது படம் சிறப்பாக வர வேண்டும் என அஜித் நினைத்து உள்ளதால் தான் இந்த இயக்குநர் மாற்றம் என கூறப்படுகிறது.
